காஷ்மீரில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லியில் உள்ள ஆர்டோர் 2.1 என்ற பிரபல ஓட்டல், ‘Article 370 தாளி’ என்ற பெயரில் காஷ்மீர் உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ‘Article 370 தாளி’ ரூ.2,370 (சைவம்), ரூ.2,669 (அசைவம்) என்று 2 வகைகளில் வழங்கப்படுகிறது. காஷ்மீரைச் சேர்ந்தவராக இருந்தால், அரசு அடையாள அட்டை ஒன்றை காட்டினால் இந்த விலையில் ரூ.370 குறைக்கப்படும்.
ஒவ்வொரு ‘Article 370 தாளி’க்கும் நாங்கள் வசூலிக்கும் கட்டணத்தில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் ரூ.170 காஷ்மீர் நிவாரண நிதிக்கு வழங்குவோம். மதச்சார்பற்ற தன்மையை ஊக்குவிக்கும் வகையில் இந்த உணவை அறிமுகம் செய்துள்ளதாக ஓட்டல் உரிமையாளர் சுவ்வெட் கல்ரா தெரிவித்துள்ளார்.