தேர்தல் வேலைகள் முடிவடைந்த நிலையில் தனது ’ஆர்டிக்கிள் 15’ படத்தின் படப்பிடிப்பை நடிகர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுஷ்மான் குரானா நடித்த பிரபல இந்தி திரைப்படமான ‘ஆர்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக் தான் அவர் நடிக்கவுள்ள படம் .
படப்பிடிப்பு ஏப்ரல் இறுதிக்குள் அல்லது 2021 மே மாத ஆரம்பத்தில் துவங்கும் என கூறப்படுகிறது.
‘ஆர்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். போனி கபூர் தனது பேவியூ புராஜெக்ட்ஸ் சார்பிலும், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ஆகியவற்றுடனும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.