மொராதாபாத்
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சிநேகாவுக்கு மொராதாபாத் நீதிமன்றம் பிடி வாரண்ட்பிறப்பித்துள்ளது.

பிர்பல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்கா முன்னாள் பாலிவுட் நாயகன் சத்ருகன் சின்காவின் மகள் ஆவார். இவர் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா என்னும் படத்தில் நடித்தவர் ஆவார். இவர் சில மாதங்களுக்கு முன்பு டில்லியில் நடந்த இந்தியா ஃபேஷன் மற்றும் பியூட்டி விருது நிகழ்வில் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்து ரூ.37 லட்சம் வாங்கி உள்ளார்.
இந்த நிகழ்வுக்கு வரக் கடைசி நேரத்தில் சோனாக்ஷி மறுத்துள்ளார். எனவே தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனால் வாங்கிய பணத்தைத் திருப்பி தர வேண்டும் எனக் கேட்டும் அவர் திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து உபி மாநிலம் மொராதாபாத் காவல் நிலையத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சோனாக்ஷி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
சோனாக்ஷி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவின் அடிப்படையில் அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அதே வேளையில் மொரோதாபாத் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் சோனாக்ஷி மற்றும் அவர் ஆலோசகர் அபிஷேக் சின்கா ஆஜராகாமல் இருந்தனர். இதையொட்டி மொராதாபாத் நீதிமன்றம் சொனாக்ஷி சின்காவுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
[youtube-feed feed=1]