சென்னை: அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது  ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியாகி உள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஏஐசிடிஇ அமைப்பிடம் இருந்து  தகவல்   எதுவும் வரவில்லை என உயர்கல்வி அமைச்சர்  கே.பி.அன்பழகன் தொடர்ந்து, மறுத்து வந்த நிலையில், தற்போது கடந்த 30ந்தேதியே அனுப்பப்பட்டுள்ள  கடிதம் வெளியாகி உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அரியர் மாணவர்களின் தேர்ச்சி விவகாரத்தில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தொடக் கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். சமீபத்தில்,   அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடம் (ஏஐசிடிஇ) இருந்து தனக்கு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதிதான் தேர்ச்சி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக கூறினார். இது  மாணவர்களி டையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ஆனால், ஏஐசிடிஇ அமைப்பிடம் இருந்து கடிதம் எதுவும்  வரவில்லை என உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வரை மறுத்து வந்தார்.  இதுதொடர்பாக சூரப்பாதான் விளக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளி யாகி உள்ளது. ஆகஸ்டு 30ந்தேதி வெளியான அந்த கடிதத்தில்,  அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை  ஏற்க முடியாது என்றும்,  அரியர்ஸ் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தால் எந்த தொழில் நிறுவனமும், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்காது, ஏஐசிடியின் உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழகத்தின்  அங்கீகாரம் பறிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏஐசிடியின் இந்த கடிதம்,  மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த மாணவ சமுதாயத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.