பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது.

பல்வேறு விருதுகளையும் இந்தப் படம் வென்றது. தற்போது, ஆஸ்கர் விருதுக்கு நேரடியாக அனுப்பி வைக்க பார்த்திபன் முயன்று வருகிறார்.

இதனிடையே, புத்தாண்டை முன்னிட்டு தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

ஒரே ஷாட்டில் முழுப் படத்தையும் எடுக்கவுள்ள அந்த படத்திற்கு ‘இரவின் நிழல்’ எனப் பெயரிட்டு, படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இரவின் நிழலுக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தைப் பார்த்த அவர் பார்த்திபனை பாராட்டியிருக்கிறார். அதனை பார்த்திபனே சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

“இரவின் நிழல்-இன்று இசை புயல் ARR பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது. முழு படத்தை முதலில் பார்த்ததே ஆஸ்கார் தான். ‘இது single shot முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும்.’ பாராட்டி keyboard-ல் விரல் ஓட்டினார் – வைரல் ஆகப் போகும் இசை பிரள்யத்திற்காக..”பிரளயத்துக்கு நாங்களும் தயார்.