சென்னை:

பொதுவாக வெளிநாட்டு தம்பதியர் என்றால் அடிக்கடி விவாகரத்து செய்து கொள்வார்கள் என்று தான் நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு அமெரிக்க ஜோடி 7 முறை தங்களது திருமணத்தை நடத்த திட்டமிட்டு அதில் நான்கை நிறைவேற்றிவிட்டனர்.

அமெரிக்கா அட்லாண்டாவை சேர்ந்தவர் கெப்ரில்லா. (வயது 27). கால்நடை மருத்துவர். இவரது கணவர் திமோதி. இவர் மன தத்துவியல் முதுகலை மாணவர். இருவரும் கடந்த மே 18ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சிந்தோ பாரம்பரிய முறைப்படி இவர்களின் திருமணம் 30 நிமிடத்தில் நடந்தது முடிந்தது.

இதன் பின்னர் இருவரும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணினர். திருமணம் முடிந்து இருவரும் பல நாடுகளுக்கு தேனிலவு பயணம் செல்ல முடிவு செய்தனர். இவர்களது விடுமுறை கொண்டாட்டம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து தொடங்கியது. இந்த பயணத்தின் போது 7 நாடுகளின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். முதல் திருமணம் அமெரிக்கா முறைப்படி நடந்தது.

 

 

டோக்கியோவில் இருந்து புறப்பட்ட தம்பதியர் நேராக இந்தோனேசியாவில் பாலி நகருக்கு சென்றனர். இங்கு கடந்த மே 30ம் தேதி இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டனர். விவசாய நிலத்தில் கெப்ரில்லா வெள்ளை நிற கெவுன் அணிந்தும், திமோதி கருப்பு சூட் மற்றும் டை அணிந்து திருமணம் செய்து கொண்டனர். இதில் இவர்களது நெருங்கிய அமெரிக்க நண்பர் ஒருவர் மட்டுமே கலந்துகொண்டார்.

அடுத்து நேபாளம் சென்றனர். அங்கு பாடான் நகரில் 3வது திருமணம் நடந்தது. அங்கு புத்த துறவி ஒருவரின் ஆசீர்வாதத்துடன் கடந்த 2ம் தேதி அருகில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. இதையடுத்து இந்திய முறைப்படி 4வது முறையாக திருமணம் செய்து சென்னைக்கு தம்பதியர் வந்தனர். கெப்ரில்லாவின் பேராசிரியர் மோகன் குமார் இல்லத்தில் இந்த திருமணம் இந்து முறைப்படி நடந்தது.

அந்த தெருவில் இருந்து 10 முதல் 15 பேர் வரை இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர். கெப்ரெல்லாவுடன் படித்த சில நண்பர்களும் இதில் கலந்துகொண்டனர். பின்னர் மகாபலிபுரம் சென்று சூரிய குளியலில் ஈடுபட்டனர்.

தம்பதியர் அடுத்த திருமண இலக்கை நோக்கி கென்யாவுக்கு சென்றனர். அங்கு மாசை முறைப்படி இந்த வார தொடக்கத்தில் தங்களது நான்காவது முறை திருமணத்தை முடித்துக் கொண்டனர். இருவரும் மலைவாழ் மக்களின் உடையணிந்து திருமணம் செய்துகொண்டனர்.

5வது முறை திருமணத்தை ஆகாயத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். பிரேகுவேவில் சூடான காற்று மூலம் பறக்கும் பலூனில் பறந்து வண்ணம் இந்த திருணம் நடைபெறவுள்ளது. இதில் பெற்றோரும், கெப்ரில்லாவின் சகோதரரும் கலந்துகொள்கின்றனர்.

இறுதியாக 7வது முறை திருமணம் நெதர்லாந்தில் ஆம்ஸ்டெர்டேம் பகுதியில் கத்தோலிக்க முறைப்படி நடைபெறவுள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன் இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளில் தங்களது விடுமுறை கனவு திருமணங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். தம்பதியரின் இந்த வித்தியாசமான ஆசை நிறைவேற நாமும் வாழ்த்துவோம்.