டில்லி

ந்த வருட நிதிநிலை அறிக்கையில் கார்ப்பரேட் வரி விகிதத்தை 25% ஆக குறைத்த்தால் சுமார் 4000 நிறுவனங்கள் நன்மை அடையும் என கூறப்படுகிறது.

கடந்த 2015-16 ஆம் வருடத்துக்கான நிதி நிலை அறிக்கையில்ரூ. 50 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைத்தது. அதன் பிறகு சிறிது சிறிதாக இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டு ரூ.250 கோடியை எட்டியது. ஆனால் பல நிறுவனங்கள் இந்த வரம்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கையைஏற்ற அரசு இந்த வருட நிதிநிலை அறிக்கையில் ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதத்தை 25% ஆக குறைத்தது. நிறுவனங்கள் அனைத்து நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் வரி விகிதத்தை 20-24% வரை குறைக்க சொல்லி கோரிக்கை விடுத்து இருந்தன.

பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த விகித முறை உள்ளதையும் நிறுவனங்கள் சுட்டிக் காட்டி இருந்தன.  ஆனால் அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.   ரூ. 400 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மிக அதிகமாக வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

இந்த வரி விகிதம் அதிகமாக இருந்த போதிலும் பல இனங்களுக்கு தள்ளுபடி அளிக்கபட்டதால் நிறுவனங்களுக்கு முழு வரியும் செலுத்த வேண்டி இருக்காது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே தற்போது இந்த புதிய வரி விகிதத்தினால் சுமார் 4000 நிறுவனங்கள் பயனடையலாம் என கூறப்படுகிறது. அத்துடன் இதனால் அரசுக்கு வருடத்துக்கு ரூ.3000 கோடி வரை வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறபடுகிறது.