நாளை தனுஷின் கர்ணன் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நாளை மறுநாளிலிருந்து 50% இருக்கைகள் உடன் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்று தமிழகத்தில் 3,986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஏப்ரல் 10-ம் தேதி முதல் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “கர்ணன் திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியிடப்படும்.50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அரசு உத்தரவால் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை” என்றார்.