டில்லி:

படைகலன் தொழிற்சாலைகளில் இருந்து ராணுவ பயன்பாட்டிற்கு வாங்கும் பொருட்களின் அளவை 94 சதவீத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வெடி பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் போன்றவற்றை அவசர நிலை கருதி கொள்முதல் செய்ய மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை.

இதனால் வீரர்களுக்கு சீருடை, பெல்ட், ஷூ, தொப்பி போன்றவை வழங்குவது பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் வீரர்கள் சொந்த பணத்தில் இவற்றை வெளி சந்தையில் வாங்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். சில வாகனங்கள் உதிரி பாகங்கள் இல்லாமல் பாதிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவசர தேவைகளுக்கு ரூ. 5 ஆயிரம் கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ. 6,739 கோடி செலுத்த வேண்டியுள்ளது.

படைகலன் தொழிற்சாலைகளில் இருந்து பொருட்கள் வாங்குவது மார்ச் மாதம் முதலே குறைக்கப்பட்டுவிட்டது. ராணுவத்துக்கு 94 சதவீத பொருட்களை படைகலன் தொழிற்சாலைகள் தான் வழங்கி வருகின்றன. இதை 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.11 ஆயிரம் கோடியில் இருந்து ரூ. 8 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

படைகலன் தொழிற்சாலைகளின் தேவைகள் முழு அளவில் வழங்கப்படாததால் வெடி மருந்து மற்றும் உதிரி பாகங்களுக்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக அவசர கால கொள்முதல் ஆண்டுதோறும் ரூ.24 ஆயிரம் கோடி வரை மேற்கொள்ளப்படும். இதை தற்போது 3 ஆண்டுகளுக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ. 7 ஆயிரம் முதல் ரூ 8 ஆயிரம் கோடி வரை மட்டுமே பொருட்களை ராணுவம் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது.