ஜம்மு:

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பஸ் மூலம் டில்லிக்கு ரூ. 40 கோடி மதிப்புள்ள 8 கிலோ ஹெராயின் கடத்தியதாக ராணுவ உயர் அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரில் இருந்து நேற்று சனிக்கிழமை தில்லி சென்ற ஒரு பஸ்சை குஞ்ச்வானி என்ற பகுதி அருகே வழிமறித்த காஷ்மீர் மாநில போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டபோது ஆப்பிள் பழப் பெட்டிக்குள் ஹெராயின் பாக்கெட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

சர்வதேச சந்தை விலையில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ அசல் ஹெராயின் பாக்கெட்களை கைப்பற்றிய போலீஸார் அவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாட்டில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து காஷ்மீருக்கு கொண்டு வரப்பட்டு, ஸ்ரீநகரில் இருந்து லுதியானா வழியாக டில்லிக்கு அனுப்பப்பட்டு வருவதாகதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஜம்மு -காஷ்மீர் மாநிலம், ரஜவுரி மாவட்டம், நவ்ஷேராவின் லாம் கிராமத்தை சேர்ந்த முகம்மது அன்வர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான நபர் டில்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]