ம்மு

காஷ்மீரில் ராணுவ படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்,  4 ராணுவ வீரர்களும் 9 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் ராஜேஸ் காலியா  கூறுகையில்,  “ஜம்மு காஷ்மீரின் தெற்கு எல்லையில் ஹிஜ்புல் முஜாகுதீன் அமைப்பின் 4 தீவிரவாதிகள் 12 நாட்களாக பொதுமக்கள் மீது நிகழ்த்திய தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

எனவே தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை இராணுவம் சனிக்கிழமை தொடங்கியது.  இத் தாக்குதலில் 9 தீவிரவாதிகளும் 4 ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். 2  வீரர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

மோசமான வானிலை காரணமாக இறந்தவர்களின் உடலை மீட்பதில் ராணுவத்திற்கு சிக்கல்  நிலவியதாகவும் அவர் தெரிவித்தார்…