சென்னை:   ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுசிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் காவல்துறை நடத்திய சோதனையில் 50 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனை அவரது வழக்கறிஞர்கள் சந்தித்து அஸ்வத்தமன் கைது குறித்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சிறையில் இருக்கும் நாகேந்திரனை கண்காணிக்க தனி காவலர் நியமிக்கப்பட்டு, வழக்கு தொடர்பாக நாகேந்திரனின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் பெறப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஒரு ஆண்டுகளாக நாகேந்திரன் எத்தனை நபர்களை சிறையில் சந்தித்தார், அவர் யாரிடம் எல்லாம் உரையாடினார், அவர் மருத்துவமனைக்கு செல்லும்போது யாரை சந்தித்தார், என அவருடன் இருக்கும் காவலர் வைத்திருக்கும் சிறப்பு ரெக்கார்டிங் டிவைஸ் மூலம் தற்பொழுது ஆய்வு செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்திலுக்கு, தொடர்பு இருக்கும் என காவல்துறையினர் தங்களது விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது வேலூர் சிறையில் பிரபல ரவுடி நாகேந்திரன் தான் இந்த கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்து, இருப்பார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

மேலும் ரவுடி நாகேந்திரனின் மற்றொரு மகனும், பாஜக இளைஞர் அணி துணை தலைவருமான அஜித் ராஜ் இடமும் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே சிறையில் உள்ள சம்போ செந்திலின் கூட்டாளிகளை காவல்துறையினர், விசாரணை செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவுடி சம்போ செந்தில் அவ்வபோது தான் தங்கியிருக்கும் இடத்தை மாற்றிக்கொண்டே வருவதால், அவரை பிடிப்பதில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை தேடும் பணியில் மும்பையில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும், தகவல் தெரிவிக்கப்படுகிறது.  இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் விசாரணை செய்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரவுடி நாகேந்திரனை காவல்துறையினர் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நாகேந்திரனின் பெயரும் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில்  நேற்று (ஜனவரி 7ந்தேதி) மீண்டும்  விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 11 பேர் மட்டுமே குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதால், அதற்கு பதில் அளிக்க ஏதுவாக விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும், இந்த வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்படவில்லை எனவும், ஒவ்வொருவரும் ஒரு திட்டத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? அது தொடர்பாக தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதா? என கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட வாகனம் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதாககூறினார். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது தொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இறுதி விசாரணைக்காக வழக்குகளை ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3வது என்கவுண்டர் ரவுடி சீசிங் ராஜா – பரபரப்பு தகவல்