பர்ரா டா டிஜுகாவில் உள்ள “அவெனிடா தாஸ் அமெரிக்காஸ்” பகுதியில் தான் ரியோ ஒலிம்பிக் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பூங்கா அமைந்துள்ளது.
ரஷ்யத் தூதரகத்தில் பணியாற்றும் “மார்கோஸ் சீசர் ஃபெரெஸ் பிராகா” எனும் பிரேசிலிய வழக்கறிஞர் தமது மனைவி மற்றும் மகளுடன் காரில் அந்தப்பகுதியின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் நின்று கொண்டிருந்தப் போது அவரது காரை இரு இரண்டு சக்கர வாகனங்களில் வந்தக் வழிப்பறி கொள்ளைக்காரக் குழு வழிமறித்தது அதில் ஒருவன் , தனது துப்பாக்கியால்
கார் கண்ணாடியை ஓங்கி அடித்து உடைத்து , ரஷ்யத் தூதரிடம் அவர் கையில் அணிந்துள்ள கைகடிகாரத்தை தரும்படி மிரட்டியுள்ளான். ஜியூ ஜிட்சூ கலை கற்றறிந்த ரஷ்யத் தூதர் அந்த வழிப்பறிக்காரனை தந்து பி.எம்.டபில்யூ எக்ஸ்-06 காருக்குள் இழுத்து போட்டு சண்டையிடும்போது திருடனிடமிருந்த துப்பாக்கியைக் கைப்பற்றி அவனைச் சுட்டுக் கொன்றதாகச் செய்தி பரவியது.
ஆனால் ரஷ்யத் தூதரகம் அதன் ஊழியர் யாரும் அத்தகைய சம்பவத்தில் ஈடுபடவில்லையெனத் தெரிவித்துள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட வழிப்பறிக்காரனின் உடல் பலமணி நேரமாகச் சாலையில் கிடந்தது.
லியோனார்டோ லோப்பெஸ் பாடிஸ்டா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனினும், ரஷ்யத் தூதரகம், அதன் ஊழியர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்ததுடன், சம்பவத்தில் ஈடுபட்ட நபர், ரஷ்யத் தூதர் எனத் தன்னை கூறிகொண்டு தப்பியுள்ள வாய்ப்பை மறுக்கவில்லை.
சனிக்கிழமையன்று துவங்கவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொள்ள உலகெங்கிலும் இருந்து வீரர்கள் குழு ரியோ ஒலிம்பிக் பூங்காவை வந்தடையும் நேரம் இத்தகைய வழிப்பறி மற்றும் கொலை சம்பவம், வீரர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இங்கு நிலவும் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
சென்ற மாதம் , ஒரு நியூசிலாந்து வீரர் தமது டிவிட்டரில், ” சற்றுமுன் சில துப்பாக்கி ஏந்திய சிலர் என்னைக் கடத்தி, ஏ.டி.எம்மில் இருந்து பணத்தை எடுக்கச் சொல்லி, பிடுங்கிச் சென்று விட்டனர் ” எனக் கூறியிருந்தார்.
ரியோ ஒலிம்பிக் நடைபெறும் போது வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்.