டில்லி:
நாடு முழுவதும் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரித்து ஒரு வருடத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், ஏராளமான வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதால், நாடு முழுவதும் 12 மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்கள் தேவையா? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை வரை 313 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களால் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 130 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், அலகாபாத்தில 69, கொல்கத்தா 45 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சம் அறிவித்து உள்ளது. மேலும் 2141 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
இந்த வழக்குகள் ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பு கூறப்பட வேண்டும் என்று உயரிய நோக்கத்தில் உச்சநீதிமன்றம் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து விசாரணை நடத்திய நிலையில், இன்னும் ஏராளமான வழக்குகள் குறிப்பிட்ட கால அவகாசத்தை தாண்டியும் நீட்டித்து வருகிறது.
மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப் பட்டியலில் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளில், அதிகப்பட்சமாக 1254 வழக்குகள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்து உள்ளது. தொடர்ந்து கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் 195 வழக்குகளும், மத்தியபிரதேசத்தில் 157 வழக்குகளும், கர்நாடகாவில் 144 வழக்குகளும், ஆந்திராவில் 101 வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
‘உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு 12 சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான 791 வழக்குகளை 11 மாநிலங்களில் அமைக்கப்பட்ட 12 விரைவான நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டது.
இந்த நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையின்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன், அரசி யல்வாதிகள் சிறைத் தண்டனையைத் தவிர்த்து, ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டி யிடுவதைத் தடுக்கிறார்கள் கடந்த ஆண்டு, 1,765 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள், அல்லது 36% நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை 3,045 வழக்குகளில் குற்றவியல் விசாரணையை எதிர்கொண்டுள்ளதாக அரசாங்கம் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தது.
அலகாபாத் ஐகோர்ட்டின் கீழ் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக 1,254 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன, அதனைத் தொடர்ந்து கல்கத்தாவில் 195 நிலுவையில் உள்ளது, மத்தியப் பிரதேசம் 157, கர்நாடகா 144 மற்றும் ஆந்திரா 101. டெல்லி, பல முக்கிய இடங்கள் அரசியல்வாதிகள் விசாரணையை எதிர்கொள்கின்றனர், சட்டமியற்று பவர்களுக்கு எதிரான 96 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
நாடு முழுவதும் உள்ள பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4,896. அவர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் ஒரு வருடத்திற்குள் முடிக்கும் வகையிலேயே விரைவு நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதன் நோக்கம் நிறைவேறியதா என்பது கேள்விக்குறி.
சட்டமியற்றுபவர்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் உத்தரபிரதேசத்திலும், தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் கேரளாவிலும் நிலுவையில் உள்ளது.
ஓராண்டுக்குள் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங் களில் ஆண்டுகளை கடந்தும் வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதற்கான நோக்கமே சிதைக்கப்பட்டு உள்ளது. அப்படியிருக்கை யில், இந்த நீதிமன்றங்கள் எதற்கு என்று சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.