தமிழக தலைமை தேர்தல் ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து புதிய தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
தமிழக அரசின் சிறு, குறு தொழில்துறை செயலாளராக உள்ள அர்ச்சனா பட்நாயக் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம், வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ச்சனா பட்நாயக், 2002ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தார். கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார். கோவையின் முதல் பெண் கலெக்டர் என்ற பெருமை இவருக்கு உள்ளது, குறிப்பிடத்தக்கது.