நியூயார்க்

லகப் புகழ்பெற்ற ஐபிஎம் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட உள்ளார்.

உலகப்புகழ் பெற்ற மென் பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் நிறுவனம் கடந்த 2005 ஆம் ஆண்டு கணினி உற்பத்தியைத் தொடங்கியது.  போட்டி காரணமாக இந்த நிறுவன கணினி விற்பனை மிகவும் அதிகரிக்காமல் இருந்தது.   சுமார் ஆறு வருடங்களுக்கு மேல் இந்த நிலை நீடித்து வந்தது   அதன் பிறகு இந்த நிறுவனத்தின்  முதல் பெண் தலைமை செயல் அதிகாரியாகக் கடந்த 2012 ஆம் வருடம் ஜின்னி ரோமெட்டிபதவி ஏற்றார்.

அவர் பதவி ஏற்ற பிறகு எடுத்த நடவடிக்கைகளால் நிறுவன விற்பனை உயரத் தொடங்கியது  இவர் செயற்கை நுண்ணறிவுத் திறன் பயன்பாட்டை ஐபிஎம் நிறுவனத்தில் செயல்படுத்தி வருகிறார்/  தற்போது 62 வயதாகும் அவர் கடந்த 40 வருடங்களாக இந்த நிறுவனத்தில் பணியாற்றி இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற உள்ளார். இதன் பிறகு அவர் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

ரோமெட்டிக்கு அடுத்தபடியாக தலைமை செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா பொறுப்பு ஏற்பார் என ஐபிஎம் நிர்வாகம் அறிவித்துள்ளது.   தற்போது 52 வயதாகும் அரவிந்த் கிருஷ்ணா செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் மெட்டிக்குப் பெரிதும் உதவி புரிந்துள்ளார்.  அது மட்டுமின்றி ஐபிஎம் நிறுவனத்தின் பல புதிய தொழில் நுட்பங்களை அமலாக்குவதிலும் இவர் பெரும் பங்கு வகித்துள்ளார்.