மொகாலி

ம் ஆத்மி ஆளும் பஞ்சாப் அரசைக் கவிழ்க்க பாஜக முயல்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

ஆம் ஆத்மிகட்சி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. நேற்று அங்குள்ள மொகாலியில் தேர்தல் பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தனது உரையில்,

“விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். நாக்கள் எங்களின் பதவிக்காக இதைக் கேட்கவில்லை. நமது பஞ்சாப் மாநிலத்தை வண்ணமயமாக்கவும், வளமாக்கவும், 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறவேண்டும்.

மத்திய அரசு பஞ்சாப் மாநிலத்துக்குக் கொடுக்க வேண்டிய ரூ.8 ஆயிரம் கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்துக்கான நிதியை நிறுத்தி வைத்து, முதல்வ பகவந்த் மானை மத்திய அரசும், பஞ்சாப் ஆளுநரும் துன்புறுத்துகின்றனர். 

அத்த்டன் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக முயல்கிறது.

ஒரு காலத்தில் பஞ்சாபில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் மின்வெட்டு இருந்து வந்ததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அவதிப்பட்டு வந்தனர்.  ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. தற்போது இங்கு பல்வேறு தொழில் அதிபர்கள் தொழில் தொடங்க முன்வருவதால் வேலை வாய்ப்பு பெருகியுள்ளது”  

என்று தெரிவித்துள்ளார்.