டில்லி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவையில் வேளாண் சட்ட நகல்களைக் கிழித்து எறிந்துள்ளார்.

பாஜக நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் எதிர்ப்பு உள்ளது.,  டில்லியில் பஞ்சாப் மற்றும் அரியானா விவசாயிகள் சுமார் 18 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து  போராட்டம் நடத்தி வருகின்றனர்.   ஆனால் அவர்கள் கோரிக்கையான வேளான் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு மறுத்து வருவதால் போராட்டம் மேலும் தொடர்கிறது.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு  போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  இதையொட்டி அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.  அந்த தகவலை டில்லி காவல்துறையினர் மறுத்த போதிலும் ஆம் ஆத்மி கட்சியினர் அந்த குற்றச்சாட்டை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

இன்று டில்லி சட்டப்பேரவையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேளாண் சட்ட நகல்களைக் கிழித்து எறிந்துள்ளார்.  அத்துடன் இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்பதால் அதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்த நிகழ்வு அரசியல் உலகில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=LeC4H1HeN-s]