சுந்தர் சி யின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ மற்றும் ‘ஆக்‌ஷன்’ படங்கள் பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் தோல்வியிலிருந்து மீண்டு,சுந்தர்.சி.அவரது இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்தை இயக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா, ராஷி கண்ணா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இதுவரை சாக்லேட் பாயாக நடித்து வந்த ஆர்யாவை இந்த படத்தில் முதன் முதலாக பேயாக நடிக்க வைத்துள்ளாராம் சுந்தர் சி. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

‘அரண்மனை 3’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.

கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்ற முடிவு செய்துள்ளது ‘அரண்மனை 3’ படக்குழு.

 

[youtube-feed feed=1]