
2011-ல் ஹாலிவுட்டின் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, தமிழில் முருகதாஸுடன் இணைந்து தமிழ் படங்களை தயாரிக்க ஆரம்பித்தது. இதற்காக முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை முருகதாஸ் தொடங்கினார்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முருகதாஸ் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இதில் சரத்குமார், சந்தீப் கிஷன் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். படத்தை எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்குகிறார்.
முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் பிற விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel