சென்னை: ரூ.40 கோடியில் 500 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் சென்னை செனாய்நகர் பகுதியில் யுபிஎஸ்சி பயிற்சி மையம் அமைக்கப்படும்  முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார். அத்துடன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வரும் 26ந்தேதி பாராட்டு விழா நடைபெறும் என்றும் கூறினார்.

சமீபத்தில் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 50 பேர் தமிழ்நாட அரசு நடத்தும் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்கள் என கூறப்படுகிறது.  இதைத்தொடர்ந்து மேலும் ஏராளமான தமிழக இளைஞர்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் யுபிஎஸ்சி பயிற்சி மையம் கட்டப்படும்  என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பேரவையில் இன்று உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,  சென்னை செனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில் ரூ.40 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இங்கு சுமார் 500 தங்கி படிக்கும் வகையில் தேவையான வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் மற்றும் பயிற்சி அறைகள் கட்டப்படும் என்றும்,  நான் முதல்வன் திட்டத்தில் படித்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நாளை மறுநாள் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

UPSC தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்ட மாணவர்கள் எனக் கூறி இத்திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.