கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளுநர் முதல்வர் இடையே மோதல் தீவிரம் அடைந்து வருகிறது. முதல்வரைத் தொடர்ந்து, மாநிலஅமைச்சர்களும் ஆளுநரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில்  முதல்வர் மம்தாவுக்கும் கவர்னர் ஜக்தீப் தன்கருக்கும் மோதல் நீடித்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு கவர்னர் நியமிக்கப்பட்டது முதல் இந்த மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவதாக முதல்வர் மம்தா குற்றம் சாட்டி வருகிறது.  இதற்கிடையில் கடந்த 2020ம் ஆண்டு  `பல்கலைக்கழகங்களின் வேந்தர்’ என்ற அடிப்படையில், துணைவேந்தர்கள் கூட்டத்தை கவர்னர் தன்கர் நடத்தினார். ஆனால், அவரது அழைப்பை மாநிலத்தில் உள்ள எந்தவொரு பல்கலைக்கழக துணைவேந்தர்களும் ஏற்கவில்லை. இதனால் கடும் கோபமடைந்த கவர்னர் மம்தா அரசை கடுமையாக விமர்சித்தார்.  மேற்குவங்க கல்வித்துறை, அரசியல் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதாக கவர்னர் விமர்சித்தார். அதற்கு, அரசியல் கட்சியைப்போல கவர்னர் செயல்படுகிறார்’ என்று மம்தா பதிலடி கொடுத்தார் மம்தா. இந்த மோதல் தற்போது வரை நீடித்து வருகிறது. மேலும் பல விஷயங்களில் மோதல் நீடித்து வரும் நிலையில், ஆளுநர் ஜக்தீர் ஒரு ஹவாலா மோசடிப் பேர்வழி என கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில்,  தனது ஒப்புதலின்றி மாநில அரசு துணைவேந்தர்களை மம்தா நியமிப்பதாக கவர்னர் குற்றம் சாட்டி வருகிறார். மகாத்மா காந்தியின் நினைவு தின நிகழ்ச்சியின் போதும் மம்தாவை மிகக்கடுமையாக  கவர்னர் ஜகதீப் தன்கர் விமர்சித்தார்.
இதையடுத்து,  கவர்னர் ஜகதீப் தன்கர்  தன்கரின் டுவிட்டர் கணக்கை மம்தா பானர்ஜி பிளாக் செய்த  கவர்னரின் டுவிட்கள் தனது அமைதியை குலைப்பதாக இருப்பதாகவும் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
மாநில அரசின் திட்டங்களுக்கு தொடர்ந்து ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்று அவ்வப்போது கவர்னரை மம்தா கடுமையா விமர்சித்து வரும் நிலையில், தற்போது அவரது அமைச்சர்களும் ஆளுநரை விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது மேற்கு வங்க அரசியலில் மட்டும் இல்லாமல் டெல்லி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.