சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதுதொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.  அதன்படி மாநிலம் முழுவதும் பதவி காலம் முடிவுற்ற  9,624 கிராம ஊராட்சிள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில்  உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதியதாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  தமிழக அரசு சமீபத்தில்,  பல்வேறு கிராமப் பஞ்சாயத்துகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சிகளுடன் இணைக்கவும் செய்யப்பட்டுள்ளது.  இதனால் உள்ளாட்சிகளின் வார்டுகள் மாற்றம் மற்றும் விரிவாக்கம் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.  இவை முடிந்த பிறகுதான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு  அரசு அறிவித்து உள்ளது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது

 தமிழ்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்தெடுக்கப்பட்டனர். அவர்களின் பதவி காலம் நேற்றுடன் (ஜனவரி 5, 2025) அன்றுடன்  நிறைவடைந்தது.  பின்னர்,  புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால் நடைபெற்ற வார்டு மற்றும் மறு சீரமைப்பு பணி காரணமாக, குறிப்பிட்ட  ஒன்பது மாவட்டங்களுக்கு 2021ஆம் ஆண்டு நடைபெற்றது.  அவர்களின் பதவிக்காலம் தொடர்கிறது.

இந்த நிலையில்,  2019 டிசம்பரில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம்  நிறைவடைந்ததால், சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து,  இதற்கான அவரசர சட்டம் இயற்றப்பட்டு  ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று, பதவி காலம்  முடிந்த  கிராமப் பஞ்சாயத்துக்களின் பொறுப்புகளை கவனிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி மாநிலம் முழுவதும்,   9,624 கிராம ஊராட்சிள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் வரையில், உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகங்களை இந்த சிறப்பு அதிகாரிகள் கவனிப்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.