சென்னை: 
ழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமுதா ஐ.ஏ.எஸ், உள்ளிட்ட 4 அதிகாரிகளைத் தமிழக அரசு  நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
இதையடுத்து வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து மழை நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து நிவாரணப் பணிகள் முழுவீச்சில் முடக்கி விடப்பட்டுள்ளது
இந்நிலையில், மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமுதா ஐ.ஏ.எஸ், கார்த்திகேயன்.ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட 4 அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.