பிரிட்டன் நாட்டின் கேபினட் கூட்டங்களில் பங்கு பெறும் உறுப்பினர்கள் ஆப்பிள் வாட்ச் அணிந்து வரக்கூடாது என்று பிரதமர் தெரசா மே தடை விதித்துள்ளார்.

thersa_may

ஆப்பிள் வாட்சில் சில பிரச்சனைக்குரிய அப்ளிகேஷன்கள் உள்ளன. இதன் வழியாக கேபினட் கூட்டங்களில் பேசப்படும் இரகசிய விபரங்கள் வெளியே கசியும் வாய்ப்புகள் உள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் குடியரசு அட்சியின் கணினிகளில் ரஷ்ய ஹேக்கர்கள் ஊடுருவி முக்கிய தகவல் திருடியது நினைவிருக்கலாம். ரஷ்ய ஹேக்கர்களைக் குறித்த இதே பயம் இங்கிலாதுக்கும் இருந்து வருகிறது.
இதே காரணத்துக்காக முன்னாள் பிரதமர் ஜேம்ஸ் கேமரூன் காலத்தில் கேபினட் கூட்டங்களுக்கு மொபைல் போன்களை கொண்டு வரக்கூடாது என்ற தடை இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தத் தடை இப்போது ஆப்பிள் போன்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.