பாரிஸ்
ஆப்பிள் நிறுவனம் பழைய ஐஃபோன்களின் வேகத்தை குறைத்ததால் ஃபிரான்ஸ் கண்காணிப்பு அமைப்பு 2.5 கோடி யூரோ அபராதம் விதித்தது.
ஸ்மார்ட் ஃபோன்களின் புது மாடல்கள் வெளி வரும் போது வேகம் அதிகமாக இருக்கும். அதற்கேற்ப பழைய மாடல்களின் வேகத்தை மென்பொருட்களை அப்டேட் செய்வதன் மூலம் மொபைல் தயாரிப்பாளர்கள் அதிகரிப்பது வழக்கமாகும். ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது பல புது மாடல்களையும் புது அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகின்றன.
இந்த அப்டேட்டுகளை தரவிறக்கம் செய்யும்போது பழைய ஐஃபோன்களின் வேகம் குறைவதாக புகார்கள் எழுந்தன. புதிய மாடல்களுக்கு மாறுவதற்காக ஆப்பிள் நிறுவனம் பழைய ஐஃபோன்களின் வேகத்தைக் குறைத்துள்ளதாக வாடிக்கையாளர்கள் தங்கள் புகாரில் தெரிவித்திருந்தனர்
இந்த ஐஃபோன்கள் பழையதாக உள்ளதால் வேகம் குறைந்துள்ளதாகக் கடந்த 2017 ஆம் வருடம் ஆப்பிள் நிறுவம தெரிவித்திருந்தது. அத்துடன் இந்த பழைய மாடல்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகளின் ஆயுட்காலம் அதிகரிக்க இந்த வேகக் குறைப்பைச் செய்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
புதிய ஐஃபோன் மாடல்கள் அறிமுகம் செய்யும் போது பழைய ஐஃபோன்களுக்கு ஆப்பிள் நிறுவனம் வேகக் குறைப்பு செய்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையொட்டி பிரான்ஸ் கண்காணிப்பு அமைப்பு ஒன்று ஆப்பிள் நிறுவனத்துக்கு 2.5 கோடி யூரோ அபராதம் விதித்துள்ளது.