வாஷிங்டன்:

வைபை மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்யும் வசதிக்கு காப்புரிமை பெற ஆப்பிள் நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது. அமெரிக்காவில் காப்புரிமை மற்றும் டிரேட் மார்க் நிறுவனத்தில் ஆப்பிள் நிறுவனம் சார்பில் ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் நீண்ட தூரத்தில் இருந்து ஒயர் இணைப்பு இல்லாத தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்வதாக தெரிவிக்கப்படடுள்ளது. பல வழிகளில் ஐபோன்களை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை கண்டறிய ஆப்பிள் நிறுவனம் முயற்சி செய்து வருவது விண்ணப்பத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

2.4 ஜிகாகெர்ட்ஸ் மற்றம் 5.4 ஜிகாகெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் வைபை மற்றும் செல்லுலார் ரேடியோ அலைவரிசை மூலம் 700 மற்றும் 2,700 மெகாகெர்ட்ஸில் சார்ஜ் செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் எதிர்காலத்தில் ஆப்பிள் ஐபோன்களை வீட்டின் சுற்றுப்புறத்தில் இருந்தே சார்ஜிங் பேட், சார்ஜர் கருவி இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ள முடியும். எதிர்வரும் ஆப்பிள் ஐபோன் 8ல் இந்த சார்ஜ் வசதி இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதற்கு சார்ஜிங் பேடும் தேவைப்படும். எனினும், வைபை இன்டர்நெட் இணைப்பு மூலம் ஐபோன் சார்ஜ் செய்வதை நாம் காணதான் போகிறோம்.