கியூபர்டினோ, அமெரிக்கா

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் செல்ஃபோன் வெளியிட்டு பத்தாண்டுகள் ஆனதையொட்டி ஐ ஃபோன் X ஐ அறிமுகம் செய்தது.

ஆப்பிள் நிறுவனம் செல்ஃபோன்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பதில் முன்னோடியான ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும்.  இதை நிறுவியவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர்.  தனது முதல் செல்ஃபோன் வெளிவந்து பத்தாம் ஆண்டான நேற்று தனது புதிய மாடலான ஐஃபோன் X ஐ ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.  ரோமன் எண் வரிசைப்படி X என்றால் பத்து என பொருள்

இத்துடன், மற்றும் இரு செல்ஃபோன் மாடல்களான ஐஃபோன் 8 மற்றும் ஐஃபோன் 8+ ஆகிய இரு மாடல்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  அது மட்டுமின்றி ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சி சீரீஸ் 3 என ஒரு கைக்கடிகாரத்தை வெளியிட்டுள்ளது.  இதில் மொபைல் ஃபோன்களை போல் பேச முடியும்,  இசை கேட்கவும் முடியும்.  அடுத்தபடியாக் ஆப்பிள் ஸ்மார்ட் டிவியையும் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய ஐ ஃபோனில் முகத்தை அடையாளம் கண்டுக் கொள்ளும் வசதி உள்ளது.  தற்போது பல ஃபோன்களில் விரலை வைத்து அன்லாக் செய்யும் வசதி உள்ளது.  ஆனால் இந்த ஃபோனின் முன் முகத்தை காட்டினாலே அன்லாக் ஆகிவிடும்.  முழுவதும் கண்ணாடியால் ஆன இந்த ஃபோன் வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டது. அறிமுகம் செய்யப்பட்ட மூன்று ஐஃபோன்களும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டவைகள் ஆகும்.

இந்த ஐஃபோன் X வரும் நவம்பர் 3 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.  இந்த ஃபோனின் இந்திய விலை ரூ.89000 என சொல்லப்படுகிறது.  இதற்கு முன்பு வெளியான ஐஃபோன் 7 வரும் செப்டம்பர் முதல் இந்தியாவில் ரூ.64000 க்கு கிடைக்கும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.