
சமீபத்தில்தான் ஐஃபோன் 7 வெளிவந்துள்ள நிலையில், தங்கள் அடுத்த ரிலீஸ் பற்றி ஆப்பிள் நிற்வனத்தினர்கூட யோசித்தார்களோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் அதற்குள் அடுத்த ஐபோன் மாடல் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து அதற்கு ஐஃபோன் 8 என்று பெயர் வைத்து விட்டார்கள் ஐஃபோன் ரசிகர்கள்.
ஒரு மாடல் ஐபோன் வெளியாகும் முன்னர் அது குறித்த வதந்திகள் வெளி வருவது புதிதல்ல, அது எப்போதுமே நடப்பதுதான். இந்த முறை இவர்கள் கற்பனை செய்துள்ள ஐஃபோன் 8 எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்.
1. இந்த முறை அலுமனிய உடலுக்கு பதிலாக முழுக்க முழுக்க ரேடியோ-டிரான்ஸ்பரண்ட் கண்ணாடியால் ஆன லேசரில் இழைக்கப்பட்ட இணைப்புகளுடன் கூடிய அற்புதமான வெளிப்புறத் தோற்றம்.
2. எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே: ஐபோனின் முற்பகுதி முழுவதும் டிஸ்பிளேயாக மாறுகிறது. ஹோம் பட்டன் பக்க வாட்டிற்கு இடம் பெயர்கிறது.
3. 10 நானோ மீட்டர் ஆ11 சிப்புடன் குடிய மைக்ரோ ப்ராசசர். தற்போது வெளிவந்துள்ள ஐஃபோன் 7 மாடல் ஆ10 ப்யூஷன் சிப்பைக் கொண்டது.
4. வயர்லஸ் சார்ஜிங் வசதி
5. ஆப்பிள் வாட்சில் உள்ளது போல மிக நுண்ணிய சென்சர்களுடன் கூடிய டிஜிட்டல் கிரீடம்.
6. இரும்பைவிட நான்கு மடங்கு கடினமான செராமிக் உடலுடன் வெளிவரவும் வாய்பிருக்கிறது.
வரும் 2017-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் 10-வது பிறந்தநாள் என்பதால் அந்த ஆண்டில் வெளியிடப்படும் ஐஃபோனும் ஸ்பெஷலாக இருக்கும் என்று அதன் இரசிகர்கள் எதிர்நோக்குகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel