டெல்லி: 

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, ஆப்பிள், கூகிள் தொழில்நுட்ப நிறுவனங்கள, வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்பு ஆப்-களை நீக்க தொடங்கியுள்ளன.

இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, ஆப்பிள் நிறுவனம் கொரோனா வைரஸ் அல்லது கோவிட் -19 தொடர்பான ஆப்-களுக்கு தடை விதித்துள்ளது. மருத்துவமனைகள் அல்லது அரசு நிறுவனங்கள் உருவாக்கிய ஆப்-களை மட்டுமே அனுமதிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் ஆப்பிள் ஆப் டெவலப்பர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகள் குறித்து ஆப்பிள் நிறுவனம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்பும் ஆப்-களை தடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருவது போன்று, கூகிள் நிறுவனம் எடுத்து வருகிறது. கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து இது போன்ற ஆப்-கள் நீக்கப்பட்டு விட்டன என்று குறிப்பிட்டுள்ளது.

கூகிள் தனது பிளே ஸ்டோரில் கொரோனா வைரஸ் தொடர்பான பயன்பாடுகளையும் நீக்கி வருகிறது. கூகிள் பிளே ஸ்டோரில் “கொரோனா வைரஸ்” என்ற சொல்லைப் பயன்படுத்தி பயன்பாடுகளைத் தேடினால், எந்த முடிவு கிடைக்காது. ஆண்ட்ராய்டு பயனர்களை தவறான தகவல்களிலிருந்தும், மக்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்பை தடுக்க வகையிலேயெ இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட அறிக்கையில், நம்பகமான மற்றும் துல்லியமான தகவல்களை அனைவரும் அணுக முடியும் என்பதை உறுதி செய்வதில் தான் கவனம் செலுத்துவதாக கூறியிருந்தார்.தவறான தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கருத்துகளை பேஸ்புக் அகற்றும் என்று அவர் கூறினார்.

புரளி மற்றும் தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களை நிறுத்துவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். மக்களை ஆபத்தில் ஆழ்த்தும் ஒன்றைப் பகிர்வது சரியில்லை என்று ஜுக்கர்பெர்க் கூறினார். தற்போதுள்ள நிலைமையைப் பயன்படுத்த முயற்சிக்கும் விளம்பரங்களையும் நாங்கள் தடுத்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

இந்த வார தொடக்கத்தில், சீன மெஜேஜ்ஜிங் ஆப்-பான வீசாட்டில் WeChat கொரோனா வைரஸ் மற்றும் COVID-19 தொடர்பான அனைத்து செய்திகளும் தடுக்கப்பட்டு விட்டது.