டில்லி:
போபர்ஸ் வழக்கில் டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக சிபிஐ சமீபத்தில் அறிவித்து. சிபிஐ-யின் இந்த முடிவு குறித்து மத்திய அரசை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி உயிரிழந்த பிறகு 28 ஆண்டுகள் கழித்து மேல் முறையீடு செய்யப்போவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
குறிப்பாக அனைத்து நீதிமன்றங்களும் இந்த விவகாரத்தில் தீர்ப்பு அளித்துவிட்டது. இதன் பின்னர் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்திருப்பது மோடி அரசு பின்பற்றும் தரம் தாழ்ந்த அரசியலுக்கு உதாரணம். மத்திய அரசின் பல விஷயங்களில் தோல்வி அடைந்துள்ளது. மோசமான நிர்வாகத்தால் கோபம் அடைந்துள்ள மக்களை திசை திருப்பும் முயற்சியாகும்’’ என்றார்.