புதுடெல்லி: ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக கொடுக்கப்பட்ட ஊழல் புகாரில், எதற்காக இதுவரை ‘முதல் தகவல் அறிக்கை’ பதிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது உச்சநீதிமன்றம்.
ஒரு புகார் தெரிவிக்கப்படும்போது, அதற்கான முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யும் வகையில், நீங்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்தானே” என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலை நோக்கி கேள்வி எழுப்பினார் நீதிபதி ஜோசப்.
ரஃபேல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான 2 மணிநேர விசாரணையின்போது இந்த கேள்வி எழுப்பப்பட்டது.
36 ரஃபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் தொடர்பான புகார், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், கடந்த அக்டோபர் மாதம் தொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.