புதுடெல்லி: சிஏஏ மற்றும் என்ஆர்சி தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுவதால், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்துள்ளது நீதிமன்றம்.
“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக, பாரதீய ஜனதா நினைப்பதையெல்லாம் செய்துவிடலாம் என்பதல்ல. சிஏஏ மற்றும் என்ஆர்சி தொடர்பாக ஐ.நா. சபை கண்காணிப்பிற்கு கீழ் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” என்று பேசினார் மம்தா பானர்ஜி.
அவரின் இந்தப் பேச்சைக் கண்டித்துதான், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மனுதாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இதை தாங்கள் விசாரிக்க முடியாது எனவும், வேண்டுமென்றால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம் என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.