அமராவதி: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம், பவன்கல்யாண், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்றுமுதல்வராக பதவி ஏற்கிறார். அவருடன் ஜனசேனாகட்சி தலைவர் பவன் கல்யாண் உள்பட 22 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர். மாநில துணை முதல்வராக பவன் கல்யாண் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் 17 புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீஹார், ராஜஸ்தான், உத்தரகாண்ட், மஹாராஷ்டிரா மாநில முதல்வர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற 18வது மக்களவைக்கான தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் 175 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கான தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எம்.ஏ.க்கள் கூட்டம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சி தலைவராக (முதல்மந்திரியாக) சந்திரபாபு நாயுடுவை பவன் கல்யாண் முன்மொழிந்தார். பா.ஜ.க. மாநில தலைவர் டகுபதி புரந்தேஸ்வரி இதை ஆதரித்தார். இதை என்டிஏ கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஏற்றுக்கொண்டதால் சட்டசபை கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் கவர்னர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரை ஆட்சி அமைக்க கவர்னரும் ஒப்புதல் வழங்கினார். அதன்படி, இன்று பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. முதல்வராக சந்திரபாபு நாயுடு 4வது முறையாக பதவி ஏற்கிறார். அவருடன் பவன்கல்யாண் உள்பட பல அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.
ஆந்திராவில் அமைச்சர் ஆகிறார் பவன் கல்யாண்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு 12 ஜூன் 2024 8:44 AM சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக ஆந்திர முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். மேலும் படிக்க விஜயவாடா: ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன்
தெலுங்குதேசம் வெளியிட்டுள்ள அமைச்சரவை பட்டியலில் பவன் கல்யாண் பெயர் முதலாவதாக இடம்பெற்றுள்ளது. பவன் கல்யாணுக்கு அடுத்தப்படியாக சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் இடம்பெற்றுள்ளார். பட்டியலில் முதன்மை பெற்றிருப்போருக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், கிஞ்சரபு அட்சதை, கொல்லு ரவீந்திரன், நாதெண்டல மனோகர், பொங்குரு நாராயணா, அனிதா வாங்கலபுடி, சத்ய குமார் யாதவ், நிம்மல ராம நாயுடு, நசியம் முகமது ஃபாரூக், ஜனார்தன் ரெட்டி, பாரத், சவிதா உள்ளிட்டோர் அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.