சென்னை:
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை கூறியிருந்தது. அதன்படி 2017 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.
இந்த உத்தரவு அதிமுக இடையே பெரும் சலசலப்பை உண்டாக்கியது. அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவ்வாறு சிறப்பு நீதிபதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு மட்டுமில்லாமல் டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்ததையும் சுட்டிக்காட்டி நீதிபதி கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அரசியல் பயணத்திற்கான நேரம் வந்துவிட்டதாகவும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கூறினார்.
[youtube-feed feed=1]