டெல்லி: மத்திய அரசின் ஆலோசனையின்றி எந்த மாநிலமும் ஊரடங்கை அறிவிக்க கூடாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 25 முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  மே மாதம் 31ம் தேதி வரை இந்த ஊரடங்கு கடுமையான விதிகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பின்னர், மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை, பொருளாதாரம் ஆகிய சூழலை அடிப்படையாக கொண்டு ஜூன் 1ம் தேதி முதல், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நடைமுறைப்படுத்தியது.

தற்போதுள்ள ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மத்திய அரசின் உத்தரவின்றி நாட்டில் எந்த மாநிலமும் ஊரடங்கை அறிவிக்க கூடாது என்று அதிரடியாக அறிவித்து இருக்கிறது.