
கோலாலம்பூர்:
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டிருந்த மலேசிய முன்னாள் துணைபிரதமர் அன்வர் இப்ராகிம், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மலேசிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்து, அன்வர் இப்ராகிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் பிஎச் கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதைத்தொடர்ந்து 92 வயதான மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றார்.
அதைத்தொடர்ந்து, அன்வரை விடுதலை செய்ய வேண்டும் என மலேசிய மன்னரிடம் பிரதமர் மகாதீர் கோரிக்கை வைததார். அந்த கோரிக்கயை ஏற்று அன்வருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய மன்னர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அன்வர் இன்று விடுதலை செய்யப்பட்டார். அன்வருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், விடுதலை செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் இருந்து வெளியேறி அரண்மனைக்கு புறப்பட்டு சென்றார்.
அன்வர் 1993 முதல் 1998 வரை மலேசியா துணை பிரதம மந்திரியாகவும், 1991 முதல் 1998 வரை நிதி அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். அவர்மீதான ஓரிச்சேர்க்கை மற்றும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கடந்த 1999ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது, தற்போதைய பிரதமர் மகாதீர் முகமது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் மகாதீர் முகமது 2 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருப்பேன் என்று கூறி உள்ளதால், மகாதீருக்கு பிறகு அன்வர் பிரதர் பதவி பொறுப்பு ஏற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது..
[youtube-feed feed=1]