சென்னை

முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும் அதையொட்டி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.  தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

அதற்குப் பிறகு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்த ஊழல் புகாரின் அடிப்படையில் ஒவ்வொருவர் வீடாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.  அவ்வகையில் முன்னாள் அச்சர்கள் வேலுமணி, எம் ஆர் விஜயபாஸ்கர், வீரமணி மற்றும் சி விஜயபாஸ்கர்  ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.

இன்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் சோதனை இட்டு வருகின்றனர்.   இந்த சோதனை சென்னை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமைச்சருக்குச் சொந்தமான 40 இடங்களில் நடந்து வருகிறது.