முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அன்னா ஹசாரோ மற்றும் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம், ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதீய ஜனதாவால் ஆதரவளிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டதாகும் என்று கூறியுள்ளார் பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்.
மேலும், தற்போது டெல்லி முதல்வராக இருப்பவரும், அப்போதைக்கு அந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவருமான அர்விந்த் கெஜ்ரிவாலின் இயல்பையும் நான் அறிந்துகொள்ள தவறிவிட்டேன். நான் வாழ்க்கையில் செய்த பெரிய தவறுகள் வவை என்றுள்ளார் அவர்.
அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பியக்கத்திற்கு ஆர்எஸ்எஸ் பின்புலமாக இருக்கிறது என்பதை, அவர் ஒருவேளை அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அதைப் பற்றி தெரியும். அதேசமயம், எனக்கு அதுகுறித்த ஒரு சிறிய சந்தேகம் இருந்தது.
அந்தப் போராட்டமானது, காங்கிரஸ் கட்சியை அதிகாரத்திலிருந்து இறக்கி, தாங்கள் பதவியில் அமர்வதற்காக, ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதீய ஜனதாவால் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.
அர்விந்த் கெஜ்ரிவாலைப் பற்றியும், அவரின் நேர்மையின்மை குறித்தும் மிகவும் தாமதமாகவே தெரியவந்தது. ஆனால், அதற்குள் அவர் பெரிதாக வளர்ந்துவிட்டார் என்றுள்ளார் பிரஷாந்த் பூஷன்.
இந்தப் போராட்டம், வலதுசாரி சக்திகளினுடைய திட்டமிட்ட சதி என்ற குற்றச்சாட்டு, அப்போராட்டம் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.