கொழும்பு

நேற்று நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

இலங்கையில் நேற்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பல்வேறு சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணும் பணி இரவு முழுவதும் தொடர்ந்தது. இதன் இறுதி முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியத்துக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 8.20 மணிப்படி

ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) – 2,62,057 வாக்குகள் (16.37 சதவீதம்)

அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) – 7,96,941 வாக்குகள் ( 49.77 சதவீதம்)

நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) – 46,757 வாக்குகள் ( 2.92 சதவீதம்)

சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) – 4,12,845 வாக்குகள் ( 25.78 சதவீதம்)

அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) – 37,748 வாக்குகள் ( 2.36 சதவீதம்)

திலகர் (தமிழ் வேட்பாளர்) – 218 வாக்குகள் ( 0.01 சதவீதம்)

பெற்றுள்ளனர்,