தென் கொரிய விமான நிறுவனமான ஜெஜூ விமான நிறுவனத்தின் மற்றொரு விமானத்தில் இன்று கோளாறு ஏற்பட்டது.
இதே விமான நிறுவனத்தின் விமானம் நேற்று பறவை தாக்குதலால் விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் Boeing 737-800 ரக விமானத்தின் கியர் பாக்சில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்தார்.
இதையடுத்து மீண்டும் சியோல் விமான நிலையம் வர உத்தரவிடப்பட்டு நிலையில் இன்று காலை சியோல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Boeing 737-800 விமானம் கடந்த 2 நாளில் இரண்டாவது முறையாக கோளாறு ஏற்பட்டதை அடுத்து இதுகுறித்து விரிவான ஆய்வு செய்ய விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.