சென்னை; நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு குறித்த தேதிகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் மண்டலம் மூன்றில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பேசியவர், முதலமைச்சரின் உடல்நிலை நன்றாக உள்ளது. இன்னும் இரு நாட்களில் அவர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்றார்.
திருச்சியில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் 13 வகையான துறை சார்ந்த அலுவலர்கள் இங்கே மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு கண்டு வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பங்கள் அதிக அளவில், அடுத்தபடியாக பட்டா கேட்டு அதிக விண்ணப்பங்கள் வருகின்றன என்றவர், “கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு தொகுதியிலும் முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்களை பெறப்பட்டு பரிசீலனை செய்து அதற்கான தீர்வு கண்டு வருகிறது. இதனுடைய அடுத்த வெர்ஷன் தான் உங்களுடன் ஸ்டாலின். இதற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயர் வைக்க கூடாது என சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்களே என்ற கேள்விக்கு, “மக்களை சார்ந்த திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். இதில் பெயர் வைப்பது வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். இது அவர்களின் எதிர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறது என்றவர், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாமில் பெறப்படும் OTP க்கு தடை விதித்தது திமுகவுக்கு பின்னடைவு கிடையாது, மக்களை தேடிச் செல்லும்போது மக்கள் முகமலர்ச்சியோடு வரவேற்கின்றனர். இதைப் பொறுத்துக் கொள்ளாமல் சிலர் நீதிமன்றத்தை நாடி உள்ளனர் என்றவர், ஓரணியில் தமிழ்நாடு என்பது ஒரு வெற்றிகரமான திட்டம். மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நீதிமன்றம் என்ன வழிகாட்டுகிறதோ அந்த உத்தரவை மதிக்கக் கூடிய வகையில் நாங்கள் செயல்படுவோம் என்றார்.
நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளுக்கான தேதிகள் கடந்த ஆண்டை போல முன்கூட்டியே வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு, இன்னும் ஒரு வாரத்திற்குள் பொதுத்தேர்வு குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
விலைவாசி பொருட்கள் உயர்வாழ் அடித்தட்டு மக்கள் பாதிப்பு குள்ளாகிர் என எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறாரே என்ற கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி எதையாவது பேச வேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறார், கூட்டம் வந்துவிட்டதால் கூட்டத்திற்கு தகுந்தார் போல் பேச வேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறார் என்றார்.