புதுடெல்லி:
சி.பி.எஸ்.இ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடங்கும் தேதிகள் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.

கொரோனா நோய் பரவலால் 2020-2021-ம் கல்வியாண்டின் இயல்பான நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்குபெற முடியாமல் ஆன்லைனில் முடிந்த அளவுக்கு கற்று வருகிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஆனால் இறுதித்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாநில பாடத்திட்ட தேர்வுகளுக்கு முன்னதாக சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இதனால் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுக்கான தேதியை அந்த மாணவர்கள் எதிர்நோக்கி உள்ளனர். இந்த தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தநிலையில், தேர்வு தொடங்கும் தேதிகள் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சி.பி.எஸ்.இ தேர்வு தேதிகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் அறிவித்தார்.

இதன்படி, மே நான்காம் தேதி முதல் சிபிஎஸ்சி பத்து மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.