சென்னை

மிழக பாஜக தலைவர் அண்ணாமலை தாம் மக்களவைத் தேர்தலில் போட்டியா என்ற கேள்விக்கு இன்று விடை அளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தனது நடைப்பயணத்தை முடித்து வைத்து அதையொட்டி நடந்த பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். வர உள்ள மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று பலரும் கூறி வருகின்றனர். 

இன்று அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர், 

“நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்ற தகவலை யார் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. எங்கள் கட்சித் தலைமை என்னை எந்த இடத்தில், எந்த தொகுதியில் போட்டியிடச் சொன்னாலும் நான் போட்டியிடுவேனே தவிர எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது. எங்கள் கட்சித் தலைமையின் முடிவுதான் எனது முடிவு.

நான் கட்சி தேர்தல் பணி செய்ய சொன்னால் தேர்தல் பணி செய்வேன். தேர்தல் பிரச்சாரம் செய்யச் சொன்னால் பிரச்சாரம் செய்வேன். கட்சியில் எனக்குத் தேர்தலில் வாய்ப்பு கொடுங்கள் என்றோ கொடுக்காதீர்கள் என்றோ கேட்கவில்லை. கட்சிதான் அனைத்தையும் முடிவு செய்யும். எங்களது கட்சியில் எனக்கு எங்கள் கட்சியில் கொடுத்துள்ள பொறுப்பைச் செய்து கொண்டிருக்கிறேன்.

வரும் 4 ஆம் தேதி கல்பாக்கம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலு சென்னை ஒய்.எம்.சி.ஏ. பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார். ஓரிரு நாட்களில் எந்தெந்த கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, யாரெல்லாம் மேடையில் இருப்பார்கள் என்பதைத்  தெரிவிக்கிறேன்.”

என்று கூறி உள்ளார்.