சென்னை: ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்க்க  மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளதற்கு, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை செயல்படுவதாக செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டி உள்ளார்.

காஷ்மீரில் நடந்த பிரச்சனைகளைத் தழுவி எடுக்கப்பட்ட ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற  இந்திப் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இந்தப் படம் கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. காஷ்மீர் மண்ணின் மைந்தர்கள் எனப்படும் காஷ்மீர் பண்டிட்கள் அங்கு தீவிரவாதம் தலைத்தூக்க தொடங்கியதும், 1985ம் ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து வெளியேறி மற்ற மாநிலங்களில் குடியேறினர்.

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தில், பண்டிகள் வெளியேற்றப்பட்டது குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால், தி காஷ்மீர் பைல்ஸ்’  திரைப்படம் நாடு முழுவதும் உள்ள இந்துத்வா ஆதரவாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், பாஜக ஆளும் மாநிலங்களில்  இந்த படத்து  வரி விலக்கு அளித்துள்ளன. இலவசமாக பொதுமக்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டுகின்றனர்.

இந்த சம்பவங்கள் நடைபெற்றபோது,  மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றதால், இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், இந்த படத்தின் காட்சிகள், அதன் நோக்கம் தவறாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது, காஷ்மீர் பண்டிட்டு களுக்கு எதிராக வன்முறை நடக்கவில்லை. மேலும் அப்போது ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்தவர் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கூறி உள்ளது.

இந்த நிலையில்,  ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை சென்னையில்,  பொதுமக்கள் இலவசமாக பார்வையிட மாநில பாஜக அழைப்பு விடுத்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டரில் ஸ்பெஷல் படக்காட்சி திரையிடப்பட உள்ளதாக பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

‘தி காஷ்மீர் பைல்ஸ்’  திரைப்படம் இன்று (16ம் தேதி)  மாலை 5.30 மணிக்கு இப்படம் திரையிடப்படுகிறது. பாஜக இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக கூறப்படு கிறது. இதில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டவர்கள் மட்டும் பங்கேற்குமாறு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பிதழை சுட்டிக்காட்டி, ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவருமான  செல்வப்பெருந்தகை டிவிட் பதிவிட்டு உள்ளார்.  அதில்,

தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நல்லாட்சியில், அமைதி பூங்காவாக உள்ள தமிழ் நாட்டில் கொஞ்ச நாளாகவே @bjptamilnadu தலைவர் @annamalai மதக்கலவரம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறார். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’  படத்தை பார்க்க தலைநகரில் ஹிந்த்துவா சக்திகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் மத மோதல்கள் உருவாகும் அபாயம் உள்ளது.  எனவே, மாண்புமிகு @cmotamilnadu திரு @mkstalin அவர்கள் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, அந்த படம் திரையிடுவதை தடை செய்யவேண்டும்.மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை எக்காலத்திலும் அனுமதிக்கக்கூடாது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்