அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக மகளிர் அணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற இருந்தது.

இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், “மாணவிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் ?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், போராட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தார்.

* அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

* காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

* இந்த விவகாரம் போராட்டம் நடத்துவதற்கு ஏற்புடையது அல்ல

* இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்க பட வேண்டும்.

* இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகிறார்கள்.

* போராட்டம் நடத்தும் ஒவவொருவரும் முதலில் தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று.

* இந்த சமூகத்தில் பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

* வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்.

என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காட்டமாக கூறியதோடு பாமக-வின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பாமக போராட்டத்திற்கு அனுமதி தர உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து… தடையை மீறி போராடிய செளமியா அன்புமணி கைது…