சென்னை; அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்று 2வது நாளகை விசாரணை நடத்தியது.

பின்னர் செய்தியாளக்ரள சந்தித்தபோது,   ‘ஏற்கனவே பல வழக்குகள் உள்ள ஞானசேகரனை அரசு எப்படி இயல்பாக நடமாட அனுமதித்தது?  என கேள்வி எழுப்பியதுடன்,  விசாரணை தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்’ என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன் கடந்த திங்கள்கிழமையன்று(டிச.23) கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த அடையாளம் தெரியாத இருவர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவி சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகரான,   முக்கிய குற்றவாளி ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,  இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு தானாகவே விசாரணைக்கு ஏற்று, நேரடி விசாரணை நடத்தி வருகிறது. இரண்டு நாளாக விசாரணை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது,  அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்களிடம் நேற்று 7 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், இன்றும் விசாரணை நடைபெற்றது தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவில் உள்ள மம்தா குமாரி, பிரவீன் தீக்சித் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

பல்கலை பேராசிரியர்கள், மாணவ, மாணவியரிடம் விசாரித்து பல்வேறு தகவல்களை சேகரித்தனர். கவர்னர் ரவியை, ராஜ் பவனில் சந்தித்த மகளிர் ஆணைய குழுவினர், போலீஸ் டி.ஜி.பி.,யையும் சந்தித்தனர்.

பின்னர் விசாரணை முடிந்து, இன்று (டிச.,31)  மாலை டில்லி செல்லும் வழியில், சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி நிருபர்களை சந்தித்தார். அப்போது, ஏற்கனவே பல வழக்குகள் உள்ள ஞானசேகரனை அரசு எப்படி இயல்பாக நடமாட அனுமதித்தது? பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்து விசாரித்தோம். கவர்னரிடமும் பேசியிருக்கிறோம். விசாரணை தொடர்பான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம் என்றார்.

இதேபோன்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரணை தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கியுள்ளது.