சென்னை:
கன்னியாகுமரி மாவட்டம் குழித்தலையில் அண்ணாசிலை அவமதிக்கப்பட்டதற்கு, துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும, சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை என எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் கந்தசஷ்டி கவசம் அவமதிக்கப்பட்டதில் இருந்து தமிழகத்தில் மதரீதியிலான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயின்ட் ஊற்றப்பட்டது பிரச்சினையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், குமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையில் இன்று மர்ம நபர்கள் காவிக்கொடியையும் கட்டியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அநாகரிக செயலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
குமரியில் பேரறிஞர் அண்ணாவின் சிலையை மர்மநபர்கள் அவமதித்து, பீடத்தில் காவிக்கொடி கட்டிய செயலை கண்டிக்கிறேன். சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.