டெல்லி : அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்  இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைத்து  உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்க போன பெற்றோரை காவல்துறையினர் கொடுமையாக தாக்கி, வழக்கை வாபஸ் பெற முயற்சித்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த  வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இச்சம்பவம் குறித்து, கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த நிலையில், புகாரை வாங்க மறுத்து, போலீசார், அவர்களே மீதே வழக்குபதிவு செய்தனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில்,  பின்னர் மகளிர் போலீசார்,  புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை செய்து வரப்பட்டது.

இந்த நிலையில்,    சிறுமியின் தாயார் உயர் நீதிமன்றத்தில் குற்றவாளியை விரைந்து கைது செய்ய ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறையினரின் செயல்பாடு முறையாக என கூறிய நீதிபதி, கடந்த அக்.1ம் தேதி விசாரணைக்கு வந்த போது,  வழக்கை மத்திய புலனாய்வு துறை (CBI) விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து,  சென்னை காவல் துறை   உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

சிபிஐ., வசம் ஒப்படைக்கப்பட்டால் அடுத்த 5 அல்லது 7 ஆண்டுகள் கூட, வழக்கு முடிய ஆகலாம்.  அதனால்,  காவல்துறையின் சிறந்த அதிகாரிகள், மூத்த அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்தலாம் என கருத்து தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து,   அண்ணாநகர் நகர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விவகாரத்தை நீதிமன்றம் கண்காணிக்கும் என கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை  டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையிலான குழு விசாரிக்கும் என உத்தரவிட்டது.

இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று கூறியதுடன்,   சிறப்பு குழுவின் விசாரணை அறிக்கையை ஐகோர்ட் தலைமை நீதிபதி முன்பு சமரபிக்க வேண்டும் என்றும்,  ‘  அறிக்கை அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த வழக்கிற்கான சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும் என்றும்,

 விசாரிக்க அமைக்கப்படும் அமர்வு முன்பு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையை வாரம் ஒருமுறை அளிக்க வேண்டும் எறும்,  வழக்கு செலவுக்காக ரூ.50,000, இதர செலவுக்காக ரூ.25,000 சிறுமியின் தாய்க்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

பாலியல் புகார் கொடுக்க சென்ற பெற்றோர்மீது போலீசார் தாக்குதல்! சென்னை உயர்நீதி மன்றம் சூமோட்டோ வழக்கு பதிவு…

சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றியது சென்னை உயர்நீதிமன்றம்…