ஆம்ஆத்மி என்ற கட்சியை ஆரம்பித்து சொற்ப நாட்களில் டெல்லி முதல் –அமைச்சரானவர், அரவிந்த் கெஜ்ரிவால். இவர், சமூக சேவகர் அன்னா ஹசாரேயின் சிஷ்யர்.

10 ஆண்டுகளுக்கு முன்னர், ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்திய போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு தளபதியாக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் ஊழல்களை எதிர்த்து போராட, அன்னாஹசாரேக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்தது..

ஆம் ஆத்மி அரசின் ஊழலை எதிர்த்து பா.ஜ,க. நடத்தும் போராட்டத்துக்கு நீங்கள் (அன்னா ஹசாரே) துணை நிற்க வேண்டும்’’ என அவருக்கு டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால் சிஷ்யனுக்கு எதிராக போராட அன்னா ஹசாரே மறுத்து விட்டார்.

உலகின் பெரிய கட்சியான பா.ஜ.க., இந்த 83 வயது ‘பக்கிரி’யின் ஆதரவை கேட்பது துரதிருஷ்டவச மானது’’ என்று கூறியுள்ள அன்னா ஹசாரே’’ பா.ஜ.க.வசம் சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட ஏஜென்சிகள் உள்ளன. அவற்றின் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டியது தானே?’’ என்று பா.ஜ.க.வுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

-பா.பாரதி.